தமிழ்நாடு லாக்டவுன் ஜனவரி 2022 கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் நாளை முதல்
இரவு ஊரடங்கு ! (06-01-2022)
தமிழகத்தில் நாளை (06-01-2022) முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்
அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை
மருத்துவம் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு
இரவு நேர ஊரடங்கின் போது, மாநிலத்திற்குள் அரசு, தனியார் பேருந்து சேவை தொடரும் என்று அறிவிப்பு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பொருட்காட்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிகள் நடத்த
தடை
பொது பேருந்து, புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி
1 முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்பு ரத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
10,11,12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெறும் எனவும் அறிவிப்பு
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை
அரசியல் கூட்டங்களுக்கு தற்போதுள்ள தடை தொடரும்
ஞாயிற்றுக்கிழமைகளில் பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது
ஞாயிறு அன்று உணவகங்களில் பார்சல் சேவை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி
உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி
ஞாயிறு, இரவு நேரங்களில் வெளியூர் பயணம் செய்ய பயணச்சீட்டு அவசியம்
Comments
Post a Comment